34.4 C
Chennai
Friday, June 2, 2023

கோகுல் ராஜ் கொலை வழக்கில் ஐகோர்ட் தீர்ப்புக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த தாயார்.!

கோகுல் ராஜ் கொலை வழக்கின் ஐகோர்ட் தீர்ப்புக்கு கண்ணீர்...

புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு…வெயில் கொளுத்தும்…வானிலை மையம் அலர்ட்.!!

புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு என்றும், வெப்ப நிலை இயல்பிலிருந்து...

கர்நாடகாவில் ஜூன் 11 முதல் பெண்களுக்கு இலவச பயணம்! 5 திட்டங்களுக்கு அமைச்சரவையில் ஒப்புதல்!

குடும்ப தலைவிகளுக்கு ரூ.2,000, வேலையில்லாத பட்டதாரிகளுக்கு ரூ.3,000 உள்ளிட்ட...

குதிரை பேரம்.. இதற்கு காங்கிரஸ் இடம் கொடுக்கக் கூடாது – திருமாவளவன் பேட்டி

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று சென்னையில் விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி.

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் வெற்றிக்கு தேவை 113 என்ற நிலையில், 130க்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருந்து வருகிறது. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், கர்நாடகாவில் மொத்தமுள்ள 224  தொகுதிகளில் காங்கிரஸ் 129 இடங்களில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மறுபக்கம், பாஜக 63 இடங்களில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

30 இடங்களில் வெற்றி பெற்றால் முதல்வராகலாம் என நினைத்திருந்த குமாரசுவாமி கட்சி 22 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது. இதனால், கர்நாடகாவில் ஆட்சியமைக்க உள்ள காங்கிரஸுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து, பாஜகவை விமர்சித்து வருகின்றனர்.

அந்தவகையில் சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், கர்நாடக தேர்தலில் மக்கள் பாஜகவினரை விரட்டி அடித்துள்ளனர். ஹிஜாப் விவகாரம், இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு ரத்து போன்றவற்றால் கடந்த தேர்தலை விட 30 தொகுதிகளை பாஜக இழந்துள்ளது. பாஜக வழக்கம்போல் குதிரை பேரம் உள்ளிட்ட ஜனநாயக விரோத செயல்களை செய்வார்கள்.

காங்கிரஸ் இடம் கொடுக்கக் கூடாது, கட்டுக்கோப்புடன் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் தெரிவித்துள்ளார். மேலும், கர்நாடகாவில் பாஜகவை மக்கள் புறக்கணித்துள்ளதால் அதிமுக தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பாஜகவுடன் சேர்வதால் அதிமுகவிற்கு எந்த ஒரு வலிமையும் இல்லை. பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுக தொய்வுதான் அடையும் எனவும் கூறினார். விசிக தலைவர் திருமாவளவன் பிரச்சாரம் செய்த 8 தொகுதியிலும் பாஜக பின்னடைவு என்பது குறிப்பிடத்தக்கது