ஹாங்காங்கில் போராட்டகாரர்கள் மீது மிளகு குண்டு வீச்சு.!

ஹாங்காங்கில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் அவர்கள் மீது மிளகு குண்டுகளை கொண்டு தாக்கி அப்புறப்படுத்தினர். 

இங்கிலாந்து நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காங் நகரமானது 1997ஆம் ஆண்டு சீன நாட்டின் கட்டுப்பாட்டின் கீழ் ‘ ஒரே நாடு இரண்டு முறை’ என்கிற விதிமுறை அடிப்படையின் கீழ் செயல்பட தொடங்கியது. 

இந்நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு சீன அரசானது, ஹாங்காங் நகர தலைவர் பொறுப்பை நியமிக்கும் முன், சீனாவின் ஒப்புதல் பெற்று பின்னரே தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என புது சட்டத்தை ஹாங்காங் நகர் மீது புகுத்தியது. இதனை எதிர்த்து, பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. பின்னர் அந்த நடைமுறை கைவிடப்பட்டது. 

தற்போது சீன அரசானது, புதிய சட்டத்தை அமல்படுத்த உள்ளது. அந்த சட்டத்தில், சீன தேசிய கீதத்தை மதிக்காதோர் மீது 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாக அச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டம் தங்கள் உரிமையை பறிப்பது போல இருப்பதாக கூறி, ஹாங்காங் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் . 

அவர்களை போராட்டத்தை  விடுத்து களைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். ஆனால், போராட்டகாரர்கள் போராட்டத்தை கைவிடாததால், போலீசார் அவர்கள் மீது மிளகு குண்டுகளால் தாக்கி போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர். 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.