hairfalls

Homemade Oil : உங்கள் முடி அடர்த்தியாக வளரணுமா..? வீட்டிலேயே எண்ணெய் தயாரிக்கலாம் வாங்க..!

By

பெண்களுக்கு அழகு அவர்களின் கூந்தல் தான். இந்த கூந்தலில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் அது அவர்களை பெரிய அளவில் பாதிக்கும். பெரும்பாலான பெண்கள் சந்திக்கின்ற பிரச்சனைகளில் ஒன்று தான் முடி உதிர்வு. தொடக்கத்தில் ஒருசில முடிகள் உதிரும். அதனை நாம் பொருட்படுத்தாமல் இருந்தால், நாளுக்கு நாள் நமது தலையில் இருந்து உதிரும் முடிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் போகும்.

முடி சம்பந்தமான பிரச்சனைகளை உடனுக்குடன் கண்டறிந்து தீர்வு காண்பது தான் சிறந்தது. நல்ல முடி பராமரிப்பு முடி உதிர்வை தடுக்கவும், முடி வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவும். அதிகப்படியான அழுத்தம், கெமிக்கல் கலந்த ஷாம்பூ உபயோகித்தல் மற்றும் சில மருந்துகள் உபயோகித்தல் முடி உதிர்வுக்கு வழிவகுக்கும்.

தற்போது இந்த பதிவில், முடி உதிர்வை தடுத்து, முடி நடத்தியாக வளர நமது வீட்டிலேயே எண்ணெய் தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை 

  • செம்பருத்தி இலை – 6
  • மருதாணி – அரை கைப்பிடி
  • கறிவேப்பிலை – 5 கொத்து
  • வேப்ப இலை – 3 கொத்து
  • நெல்லிக்காய் – 2
  • செம்பருத்தி பூ – 6
  • தேங்காய் எண்ணெய் – அரை லிட்டர்

Homemade Oil செய்முறை : 

முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் செம்பருத்தி இலை, மருதாணி, கறிவேப்பிலை, வேப்ப இலை, நெல்லிக்காய், செம்பருத்தி பூ ஆகியவற்றை ஒரு மிக்சியில் போட்டு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு கடாயில் அரை லிட்டர் தேங்காய் எண்ணெயை ஊற்றி, அதனுள் அரைத்து வைத்துள்ள கலவையை போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். பின்பு அதனை நன்கு ஆற வைத்து, 2 நாட்கள் கழித்து அதனை ஒரு பாட்டிலில் வடிகட்டி ஊற்றி, அதனை தலைக்கு தேய்த்து வந்தால், முடி அடர்த்தியாக வளர்வதுடன் முடி உதிர்வு பிரச்னையும் நீங்கி, முடி வளர்ச்சி அதிகமாகும்.

நாம் கடைகளில் அதிக விலை கொடுத்து எண்ணெய் வாங்குவதை விட, நமது வீட்டிலேயே குறைந்த விலையில் எண்ணெய் தயாரித்து பயன்படுத்துவது மிகவும் சிறந்தது.