17பேர் உயிரிழப்பிற்கு காரணமாக இருந்த வீட்டின் உரிமையாளர் கைது..?!

கோவை மாவட்டதில் உள்ள  மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் ஆதிதிராவிட காலனியில் சுப்பிரமணியம் என்பவர் வீட்டை சுற்றி  இருந்த 20 அடி உயரமுள்ள சுற்றுச்சுவர் நேற்று அதிகாலை 3.45 மணி அளவில் இடிந்து அருகில் இருந்த நான்கு வீடுகளில் விழுந்து உள்ளது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலே 17 பேர் உயிரிழந்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் பொதுமக்கள் உதவியுடன் இடிபாடுகளில்  சிக்கி இருந்தவர்களை மீட்டனர்.

சுப்பிரமணியம் என்பவர் வீட்டை சுற்றி உள்ள மீதமுள்ள சுற்று சுவர்களை இன்று இடிக்கப்படும் என ஆட்சியர் ராசாமணி கூறியிருந்தார். இந்நிலையில் இறந்தவர்களின் குடும்பத்தை சார்ந்தவர்களும் , உறவினர்களும் வீட்டின் உரிமையாளர் சுப்பிரமணியத்தை கைது செய்யவேண்டும் அதுவரை இறந்தவர்களின் உடலை வாங்க மாட்டோம் என நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது போலீசாருக்கும் ,போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில்  ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்தை நடத்திய பிறகு இறந்தவர்களின் உடலை உறவினர்கள் வாங்கி ஒரே இடத்தில் வைத்து உடலை தகனம் செய்தனர்.

இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் சுப்பிரமணியன் தலைமறைவாக இருந்த நிலையில் தற்போது அவரை கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

author avatar
murugan