உள்துறை அமைச்சர்அமித்ஷா,தமிழக ஆளுநர் குணமடைய பிரார்த்திக்கிறேன் - துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்

உள்துறை அமைச்சர்அமித்ஷா,தமிழக ஆளுநர் குணமடைய பிரார்த்திக்கிறேன் - துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்

ஆளுநர், அமித்ஷா குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று  துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு  கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அமித்ஷா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அதேபோல் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது இல்லத்தில் தொடர் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார்.

இந்நிலையில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்  குறித்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது முதல்  பதிவில், எங்கள் அன்புக்குரிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜிக்கு விரைவாக குணமடைய  விரும்புகிறேன். விரைவில் குணமடைந்து உங்கள்  பொது சேவையைத் தொடர வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோஹித் அவர்கள் விரைவில் குணமடைந்து, பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

]]>

Latest Posts

#IPL2020: இன்றைய போட்டி.. டெல்லி – பஞ்சாப் அணிகள் மோதல்! வெற்றிபெறப்போவது யார்?
5,90,000 நாட்டிக்கல் மைல்கள் பயணம் செய்துள்ள ஐஎன்எஸ் விராட் விடைபெற்றது...
#CSK-பவுலர்களுக்குப் பாராட்டு..!இதைச் செய்யத் தவறினோம்..ரோகித்!
#IPL2020:ரசிகர்கள் இல்லாத மைதானம்! CSKபயிற்சியாளர் ஒபன்டாக்!
ஆன்லைன் வகுப்பு கற்க செல்போன் வாங்க பணமில்லாததால் சாக்கடை அள்ளிய மாணவிக்கு லேப்டாப் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்!
#IPL2020 இன்று மோதும் டெல்லி-பஞ்சாப்!!பாதகம்..சாதகம் ஒரு பார்வை !
#தீவிரவாதிகளின் சொத்துக்கள் முடக்கம்! NIA அதிரடி!
கீழடி 6ஆம் கட்ட அகழாய்வில் புதிய 6 உறைகொண்ட உறைகிணறு கண்டுபிடிப்பு...
மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களின் தாய் காலமானார்....
துணை முதல்வர் ஓ.பி.எஸ் மருத்துவமனையில் அனுமதி....