பிரபல ஹாலிவுட் நடிகர் கெவின் கிளார்க் சாலை விபத்தில் உயிரிழந்தார்..!

பிரபல ஹாலிவுட் நடிகர் கெவின் கிளார்க் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவர் சிகாகோ நகரில் பைக்கில் சென்றுள்ளார். அப்போது சிக்னலுக்காக காத்திருந்து பிறகு பயணித்த போது எதிரே வந்த கார் ஒன்று இடித்து மோதியுள்ளது. இச்சம்பவத்தில் கெவின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்து செய்த காரை ஒரு பெண் ஓட்டியுள்ளார். அந்த பெண்ணை இப்போது கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கெவின் கிளார்க்கின் வயது 32. இவர் 2003 இல் நடித்த ஸ்கூல் ஆப் ராக் என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. மேலும் இவர் ஒரு  இசையமைப்பாளர். இவரது இழப்பிற்கு பலரும் தற்போது இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.