4.3 C
London
Monday, November 29, 2021

#BREAKING : தமிழகத்தில் மேலும் 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 13 மாவட்டங்களில்  பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை தமிழகத்தில் மேலும் 5 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரியலூர், பெரம்பலூர், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, 13 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, சிவகங்கை  மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை அதிகன மழை எச்சரிக்கை விடுத்த நிலையில், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்து வருகின்றனர். நாளை நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

Hot Topics

Read More