வரலாற்றில் இன்று(மே18)…. உலக எயிட்ஸ் தடுப்பு மருந்து தினம் இன்று

ஆண்டுதோறும் மே மாதம்  18 ஆம் தேதி, உலக எய்ட்ஸ் தடுப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.  இந்த தினமானது  எச்.ஐ.வி- யைத் தடுக்கும் தடுப்பூசியின் அவசர மற்றும் அவசிய தேவை குறித்து மக்களுக்கு உணர்த்துகிறது. உலக எய்ட்ஸ் தடுப்பு தினத்தை எச்.ஐ.வி தடுப்பூசி போடுவதற்கான விழிப்புணர்வு நாள் என்றும் அழைக்கலாம்.

இந்நாளில் தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் ஒன்றாக இணைந்து தொடர்ந்து, எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வி குறித்த விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி போட்டுக் கொள்வதின் முக்கியத்துவத்தை உலகில் அறிவுறுத்தி வருகின்றனர்.

உலகளவில் கோடிக்கணக்காக்  பேர் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எச்.ஐ.வி. வைரஸ் பல வழிகளில் பரவும். இந்த நோய் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால் எய்ட்ஸ் பற்றிய தவறான கருத்துகள் பரவி வருகின்றன. எனவே இந்த தினத்தில் இதன் பரவும் விதம், தடுக்கும் முறைகள், தடுப்பு மருந்தின் அவசியம் ஆகியவை குறித்த விழிப்புனர்வு அவசியம். 

author avatar
Kaliraj