வரலாறு முக்கியம் : தேசிய கீதத்தை இயற்றிய ரவீந்திரநாத் தாகூர் பிறந்த தினம் இன்று.!

வரலாறு முக்கியம் : தேசிய கீதத்தை இயற்றிய ரவீந்திரநாத் தாகூர் பிறந்த தினம் இன்று.!

இன்று, மே 7, இந்தியாவின் முதல் நோபல் விருது வென்ற ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாள். இவர் 1861-ஆம் ஆண்டு மே 7ம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஜோராசங்கோ தாகுர்பாரியில் தேபேந்திரநாத் தாகூர் மற்றும் சாரதா தேவிக்கு மகனாகப் ஆகியோருக்கு மகனாக பிறந்தார்.

இந்தியாவை உருவாக்கிய மாபெரும் புரட்சியாளர்களில் ரவீந்திரநாத் தாகூர் மிக முக்கியமானவர். தனது இலக்கிய படைப்புகள் மூலம் இந்திய மக்களிடையே சுதந்திர வேட்கையை பரப்பியவர். இந்திய நாட்டில் ஜன கன மன போல, இவர் எழுதிய பாடல் தான் வங்காள தேசத்திலும் தேசிய பாடலாக ஒலித்து கொண்டிருக்கிறது.

இசைக்கலைஞர், கவிஞர், நாடகாசிரியர், கல்வியாளர், ஓவியர், நாவலாசிரியர் என பன்முகத்திறன் கொண்டிருந்த தாகூர் பள்ளிக்கல்வியைக்கூட முடிக்காதவர். இவர் கடந்த 1883 ஆண்டு மிருணாளினி தேவியை திருமணம் செய்துகொண்டார். 1902-இல் இவரது மனைவி மிருணாளினி தேவி மறைந்தார்.

1911-இல் இவர் இயற்றிய இசையமைத்த ‘பாரத பாக்ய விதாதா’ என்னும் வங்க மொழிப் பாடலின் முதல் சரணமே சுதந்திர இந்தியாவின் தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டது. கோரா, போஸ்ட் மாஸ்டர், சஞ்ஜாயிதா, கீதாஞ்சலி – போன்றவை மிகவும் புகழ்பெற்ற படப்பிப்புகளாக கருதப்படுகிறது.

இந்தியப் பல்கலைக்கழகங்கள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உள்பட பல வெளிநாட்டு, பல்கலைக்கழகங்கள் ரவீந்திரநாத் தாகூருக்கு கௌரவ டாக்டர் பட்டங்களையும் விருதுகளையும் வழங்கியுள்ளன. 80- ஆண்டு நிறை வாழ்க்கைக்குப்பின் உடல்நலம் குறைவு காரணமாக தாகூர், 07.08.1941 அன்று மறைந்தார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube