வரலாற்றில் இன்று(09.05.2020)…. மகாத்மாவின் அரசியல் குரு அவதரித்த தினம் இன்று….

இந்திய சுதந்திர போராட்ட வீரரும், மகாத்மா காந்தியின் அரசியல் குரு என்று அனைவராலும் போற்றப்படுபவருமான கோபாலகிருஷ்ண கோகலே (Gopal Krishna Gokale) பிறந்த தினம் வரலாற்றில்  இன்று (மே 9). அவரைப் பற்றிய சிறந்த நம்மை அறியா தகவல்கள்;

  • கோகலே  மகாராஷ்டிர மாநிலம் கோதாலுக் என்ற இடத்தில் (1866) பிறந்தார்.
  • இவரது இளம் வயதிலேயே தந்தை இறந்துவிட்டதால், இவரின் அண்ணன் வேலை பார்த்து இவரைப் படிக்கவைத்தார். மின்சாரம் இல்லாததால் தெரு விளக்கில் படித்தார்.
  • ஒரே கால் சட்டை , ஒரு மேல் சட்டை, ஒருவேளை சாப்பாடு, அதையும் இவரேதான் சமைக்க வேண்டும். இப்படிப்பட்ட சூழலில் மும்பை எல்பின்ஸ்டோன் கல்லூரியில் 1884-ல் பட்டப் படிப்பை முடித்தார்.
  • அரசு வேலைவாய்ப்புகள் வந்தன. ஆனால் அதில் விருப்பமின்றி, சமூக மறுமலர்ச்சியாளர் மகாதேவ் கோவிந்த ரானடேவின் தீவிர ஆதரவாளராக மாறினார்.
  • பின் இவர் இந்திய தேசிய காங்கிரஸில் 1889-ல் இணைந்தார்.
  • திலகர் உள்ளிட்ட தலைவர்களுடன் இணைந்து பணிபுரிந்தார். ஆனால், இவர் மிதவாதப் போக்கை கடைபிடித்தார்.
  • வன்முறையைத் தவிர்ப்பது, அரசு நிறுவனங்களில் சீர்திருத்தத்தைக் கொண்டுவருவது ஆகிய இரு முக்கிய கொள்கைகளைப் பின்பற்றினார்.
  • பின் இவர், பம்பாய் சட்டப் பேரவைக்கு 1899-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியர்களுக்குப் பொதுத்துறை விஷயங்களில் அதிக அரசியல் பிரதிநிதித்துவம் பெற்றுத்தர போராடினார்.
  • ஆங்கிலேய அரசின் குழந்தைத் திருமண தடைச் சட்டத்தை ஆதரித்தார். கோகலே மற்றும் மறுமலர்ச்சியாளர்களின் ஆதரவுடன் அந்த மசோதா சட்டமாக்கப்பட்டது.
  • இது உட்பட பல விஷயங்களில் இவருக்கும் திலகருக்கும் கருத்துவேறுபாடுகள் எழுந்தன.
  • கோகலே 1905-ல் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரானார். இந்திய சேவகர்கள் சங்கம் (Servants of India Society) என்ற அமைப்பை உருவாக்கினார்.
  • இந்த அமைப்பு, நடமாடும் நூலகங்களை ஒருங்கிணைத்து பள்ளிக்கூடங்களை நிறுவியது. தொழிற்சங்க ஊழியர்களுக்கு இரவு வகுப்புகள் நடத்தப்பட்டன.
  • மகாத்மா காந்தி வளர்ந்துவந்த ஆண்டுகளில் கோகலே அவருக்கு அறிவுரையாளராகத் திகழ்ந்தார். முகமது அலி ஜின்னாவுக்கும் இவரே வழிகாட்டியாக விளங்கினார்.
  • காந்திஜியின் அழைப்பின் பேரில் 1912-ல் தென்ஆப்பிரிக்கா சென்றார். அப்போது நாட்டு நடப்பு, சாமானிய மக்களின் பிரச்சினைகள் பற்றி காந்தியிடம் எடுத்துரைத்தார்.
  • ‘கோகலே என் அரசியல் குரு’ என தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார் காந்தி. ‘அவர் ஸ்படிகம் போன்று தூய்மையானவர், ஆட்டுக்குட்டிபோல மென்மையானவர், சிங்கம் போல வீரம் படைத்தவர், பெருந்தன்மை உடையவர், அரசியல் அரங்குக்கு பொருத்தமானவர்’ என்றும் பாராட்டியுள்ளார் காந்தி.
  • அரசியலை ஆன்மிகமாக்கல், சமூக மேம்பாடு, அனைத்தையும் உள்ளடக்கிய கல்வி ஆகியவற்றின் மீது கோகலே கொண்டிருந்த திடமான நம்பிக்கை காந்திஜியை வெகுவாக கவர்ந்தது.
  • தன் வாழ்நாள் இறுதி வரை தொடர்ந்து மக்கள் பணியாற்றி முக்கியமாக மறுமலர்ச்சி கொள்கையில் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுத்தி வந்த கோபால கிருஷ்ண கோகலே  தனது 49 ஆவது வயதில் (1915) இவ்வுலகை விட்டு மறைந்தார்.
Kaliraj

Recent Posts

நாம் ஓட்டுப்போட்டு என்னவாகப்போகுது.? மாறும் நகர்ப்புற தேர்தல் மனநிலை.!

Election2024 : தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் இருக்கும் மாவட்டங்களை விட குறைவான எண்ணிக்கையிலேயே பெருநகர பகுதி வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. மக்களவை முதற்கட்ட தேர்தல் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில்…

11 mins ago

21 மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்! எந்த மாநிலத்தில் அதிக வாக்கு சதவீதம் அதிகம்?

Election2024: நாடு முழுவதும் முதற்கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்ற 21 மாநிலங்களில் பதிவான வாக்குப்பதிவு நிலவரம் குறித்து பார்க்கலாம். 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட…

23 mins ago

ரோமியோவை அன்பே சிவம் ஆக்கிடாதீங்க! விஜய் ஆண்டனி வேதனை!

Vijay Antony : ரோமியோ போன்ற படத்தை அன்பே சிவம் ஆக்கிவிட வேண்டாம் என விஜய் ஆண்டனி கேட்டுக்கொண்டுள்ளார். நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கடைசியாக இயக்குனர்…

56 mins ago

தோனி என்ன வெளியே போனு சொல்லிட்டாரு – தமிழக வீரர் ஜெகதீசன் !!

Narayan Jagadeesan : ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியின் வர்ணனையின் போது நாராயண் ஜெகதீசன், தோனியுடனான ஏற்பட்ட ஒரு அனுபவத்தை பகிர்ந்திருந்தார். ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ்…

1 hour ago

வாக்கு சதவீதத்தில் குளறுபடி… தமிழ்நாடு அறிவித்ததை குறைத்து அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம்!

Election2024: தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முடிந்த நிலையில், வாக்கு சதவீதத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில்,…

1 hour ago

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி !! டெல்லி- ஹைதராபாத் இன்று பலப்பரீட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், ஹைதராபாத் அணியும் இன்று மோதுகிறது. ஐபிஎல் தொடரின் 35-வது போட்டியாக இன்று டெல்லி கேபிட்டல்ஸ்…

5 hours ago