வரலாற்றில் இன்று(26.02.2020)… கவிஞாயிறு தாராபாரதி பிறந்த தினம் இன்று…

கவிஞர் தாராபாரதி  பிப்ரவரி மாதம் 26ஆம் நாள்  1947 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் ‘குவளை’ என்னும் சிற்றூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் ராதாகிருஷ்ணன். பெற்றோர் துரைசாமி; புஷ்பம் அம்மாள். துணைவியாரின் பெயர் சந்தானலட்சுமி. 34 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியாவர். தமிழகத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஆவார்,  மேலும் இவர், ஆசிரியர் மற்றும் கவிஞர் என பண்முகத்தன்மைகொண்டவர். இவரின் சிறந்த ஆசிரியர் சேவைக்காக தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர்.மேலும், இவர் கவிஞாயிறு என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். தமிழ் நாடு அரசு 2010 – 2011 இல் இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது.  இவர், ஏழைகளின் நிலையை இவர் துல்லியமாகப் படம் பிடித்து,  உலகத்தைத் தாங்குகின்றவன் உழைப்பாளி என்றும்,  ஆனால் அவன் எதை எதை யெல்லாம் தாங்க வேண்டியிருக்கிறது என்றும்,  தன் தேவைக்கே ஏழை ஏங்க வேண்டியதாயிருக்கிறது இவ்விழிநிலை மாறப் புரட்சி தேவை எனக் தனது கவிதைகள் மூலம் குரல்கொடுக்கிறார்.

மேலும் இவர்,

  • திண்ணையை இடித்துத் தெருவாக்கு (புதுக்கவிதை)
  • விரல்நுனி வெளிச்சங்கள்
  • பூமியைத் திறக்கும் பொன்சாவி
  • இன்னொரு சிகரம்
  • கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.
  • புதிய விடியல்கள்
  • இது எங்கள் கிழக்கு பொன்ற கவிதைகளையும் எழுதியுள்ளார்.
author avatar
Kaliraj