வரலாற்றில் இன்று(22.05.2020)… உலக பல்லுயிர் பெருக்க தினம் இன்று…

அனைத்து தரப்பு உயிரினங்களையும் காக்க நினைவூட்ட கொண்டாடப்படும் உலக பல்லுயிர் பெருக்க தினம் இன்று.

இயற்கைக்கும், மனித வாழ்வுக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது பூமியில் வாழும் பலதரப்பட்ட உயிரினங்கள் ஆகும். இந்த தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் பல்கிப் பெருகி பரவலாகக் காணப்படுவதே பல்லுயிர் பெருக்கம் எனப்படும்.  எனவே தான் இந்த பலதரப்பட்ட உயிரினங்களின் முக்கியத்துவத்தை  மக்கள் உணர ஒன்வொரு மே மாதமும்  22-ம் தேதி உலக பல்லுயிர் பெருக்க தினம்  அனுசரிக்கப்படுகிறது. இந்த  உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினத் தையும் அழிவில் இருந்து காப்பாற்றுவதற்கான முயற்சியாக, இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

மேலும் நாம் அனைவரும் இந்த தினத்தில் உலக பல்லுயிர் பெருக்க தினம் கொண்டாடினால் போதாது; இந்த நாளை எதற்காக கொண்டாடுகிறோம் என்பதை அனைவரும் உணர வேண்டும். மரங்களை வளர்ந்தால் மழை கிடைக்கும்; புல், செடிகள் வளரும்; அதை சார்ந்த தாவர உண்ணிகள் அதிகளவில் பெருகும். தாவர உண்ணிகளை சார்ந்த மாமிச உண்ணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இயற்கையை பாதுகாப்பது பற்றி அதிக தகவல்களை அனைத்து தரப்பு மக்களும் அறிந்திடும் வகையில்  விழிப்புணர்வு ஏற்படுத்தி உயிரினங்களை காப்பது அவசியமான ஒன்றாகும்.

author avatar
Kaliraj