தற்காப்பு கலையான சிலம்பம் உருவான வரலாறு

8
  • தற்காப்பு கலையான சிலம்பம் உருவான வரலாறு

நமது முன்னோர்கள் தங்களை வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள கையாண்ட முறை தான் இன்று நம் மத்தியில் சிலம்பமாக உருவெடுத்துள்ளது. முன்னோர்கள் தங்களது கையில் இருந்த சிறிய ஆயுதங்களை பயன்படுத்தி வனவிலங்குகளிடம் இருந்து தங்களை பாதுகாத்து கொண்டனர்.

நம் முன்னோர்களின் ஆயுதம்

அந்தவகையில், அக்காலத்தில் மிகவும் வலிமையான ஆயுதமாக நம் முன்னோர்கள் கருதிய ஆயுதம் என்னெவென்றால், அது கம்பு தான். தமிழர்கள் ஆயுதம் ஏந்தி போராட துவங்கிய காலகட்டத்தில் கம்பு தான் முதன்மையான ஆயுதமாக பலராலும் கருதப்பட்டது.

Image result for சிலம்பம்

நமது முன்னோர்கள் சண்டையிடுவதற்கு ஈட்டி, கத்தி, வேல், வாள் மற்றும் கம்பு போன்ற ஆயுதங்களை பயன்படுத்தினர் அவற்றில் பழமை வாய்ந்த ஆயுதம் என்றால் அது கம்பு தான். சண்டையிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட இந்த கம்பு தான் இன்று சிலம்பாக உருவெடுத்து நிற்கிறது.

சிலம்பத்தில் வெவேறு பெயர்கள்

Image result for சிலம்பம்தமிழகம் அந்நியர்களுக்கு அடிமைப்பட்ட பின், கால மாற்றத்தால் அதன் பெயர்கள் பல இடங்களில் பல விதமான பெயர்களில் அழைக்கப்படுகிறது. தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் வடக்கன் களரி, தெக்கன் களரி, சுவடு ஆதி முறை, கர்னாடக சுவடு, சிரமம், சைலாத், தஞ்சாவூர் குத்துவரிசை, நெடுங்கம்பு என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.

சிலம்பாட்டத்தின் பயன்கள்

சிலம்பம் என்பது ஒரு தற்காப்புக்கு கலை. இது தமிழர்களின் வீரவிளையாட்டில் ஒன்றாக கருதப்படுகிறது. சிலம்பம் கற்றுக் கொள்வதற்காகவே தமிழகத்தில் பல சிலம்பாட்ட கழகங்கள் உள்ளன.

Image result for சிலம்பம்

சிலம்பு ஆடுவதற்கு குறைந்தது இருவர் தேவை. சிலம்பாட்ட போட்டிகளில் நன்கு பயிற்சி பெற்ற வீரர்களே விளையாடுவார்கள். இதில் ஆன் மற்றும் பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். இந்த காலை தென் தமிழகத்தில், நெல்லை தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் பெருமளவு பழக்கத்தில் உள்ளது.

சிலம்பம் ஒரு உடற்பயிற்சி

சிலம்பாட்டம் ஒரு சிறந்த உடற்பயிற்சியாகவே கருதப்படுகிறது. இந்த சிலம்பு கம்பை எடுத்து சுற்றும் போது, உடம்பில் உள்ள ஒவ்வொரு நாடி நரம்பும், தசைகளும் இயக்கப்படுகின்றன. இந்த கம்பை தன்னை சுற்றி சுழற்றும் போது தங்களது உடலை சுற்றிலும் ஒரு வெளி போன்ற அமைப்பை உருவாக்கிட முடியும்.

Image result for சிலம்பம்

இவ்வாறு செய்யும் போது, நமது உடலை சுற்றி அமைக்கப்படும் வேலிக்குள் யாராலும் உட்புக முடியாது. நம்மை எதிர்த்து வரும் எதிராளியை நம்மால் தடுக்க முடியும். மேலும், இது உடலின் வலிமை, ஆற்றல், விரைவுத்திறன், உடலின் நெகிழ்தன்மை ஆகியவற்றை அடைய சிலம்பப் பயிற்சி உதவுகிறது.