33.3 C
Chennai
Wednesday, June 7, 2023

கடந்த 4 ஆண்டுகளாக ரோஹித் ஷர்மா சிறப்பாக ஆடியுள்ளார்…விராட் கோலி புகழாரம்.!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்று லண்டன் ஓவல்...

QR குறியீடு மூலம் தலைவர்களின் வரலாறு; புதிய திட்டத்தை அமைச்சர் உதயநிதி தொடங்கிவைத்தார்.!

தலைவர்களின் வரலாற்றை QR குறியீடு மூலம் தெரிந்துகொள்ளும் புதிய திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

தமிழக அரசின் சார்பில் பராமரிக்கப்படும் தலைவர்களின் நினைவகங்கள், சிலைகளின் 360° கோண புகைப்படங்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை QR Code மூலம் தெரிந்துகொள்ள புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தலைவர்களின் வாழ்க்கை வரலாறு அடங்கிய காணொலி மற்றும் ஒலிக்குறிப்புகளை QR Code மூலம் ஸ்கேன் செய்தால் பார்க்கிறபடி புதிய திட்டத்தை முதற்கட்டமாக சென்னை காமராஜர் சாலை திருவள்ளுவர் சிலை அருகே, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். நமக்காக உழைத்த தலைவர்களின் புகழை டிஜிட்டல் வழியில் மக்கள் அறிவதற்கு பரவச்செய்யும் இம்முயற்சியாக அமைச்சர் உதயநிதி குறிப்பிட்டார்.</p

>