பாகிஸ்தானில் இந்து கோயில்கள் இடிக்கப்பட்டது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கனேரியா கண்டனம்.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இந்து கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இரண்டு கோயில்கள் புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு கோயில் 150 வருட பழமையானது என்று கூறப்படுகிறது.
இது குறித்து பாகிஸ்தானைச்சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா, பாகிஸ்தானில் இந்து கோயில்கள் இடிப்பது குறித்து சர்வதேச சமூகம் மவுனம் காப்பது ஏன் என கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள டிவீட்டில், நாள்தோறும் மதத்திற்கு எதிராக பல்வேறு குற்றங்கள், மதமாற்றம், கொலை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
Why is the Intl. Community silent on the demolition of historical temples in Pakistan?
Countless atrocities like conversion, kidnapping, rape & murder are happening everyday. There is no freedom of religion.
Hindus all over the world should raise their voice against injustice. https://t.co/cEbY59HOW3
— Danish Kaneria (@DanishKaneria61) July 17, 2023
உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் இந்த விஷயத்தில் அநீதியை எதிர்த்து ஒன்றாக குரல் கொடுக்க வேண்டும் என ட்வீட் செய்துள்ளார். அதேநேரம் சிந்து மாகாண இந்து சமய தலைவர்கள் முதல்வரிடம் இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர். இதேபோல் மற்றொரு இந்து கோயிலில் ராக்கெட் லாஞ்சர் ஏவப்பட்டுள்ளது எனவும்,இந்த சம்பவத்தில் 8 பேர் துப்பாக்கியுடன் ஈடுபட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.