இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கைது!

ராகுல் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த சென்ற அர்ஜூன் சம்பத் கைது .

குமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை நடைபயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று தொடங்குகிறார். இன்று கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை 3,500 கிலோ மீட்டர் 150 நாட்கள் இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். இந்த பயணத்தை கன்னியாகுமரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மொத்தம் 150 நாட்களில் 12 மாநிலங்கள் வழியாக இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது.

நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வு, பொருளாதார சீர்குலைவு, வேலையில்லாத் திண்டாட்டம், சாதி, மத பிரிவினைவாதம் போன்றவற்றைக் கண்டித்தும், பாஜக அரசின் மக்கள் விரோத செயல்களை பொதுமக்களிடம் எடுத்துரைத்து ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கும் நோக்கில் இந்த பாதயாத்திரையை மேற்கொள்கிறார். இந்த நிலையில், ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்க போராட்டம் நடத்த சென்ற இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டார்.

கோவையில் இருந்து கன்னியாகுமரிக்கு நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில், ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்க சென்ற போது, திண்டுக்கல் ரயில்வே நிலையத்தில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத், டி.எஸ்.பி கோகுலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் கைது செய்தனர்.

Leave a Comment