இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் ராம கோபாலன் காலமானார்!

இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 94.

இந்து முன்னணி தலைவர் ராமகோபாலனுக்கு கடந்த 27 ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ராமகோபாலன் உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.