3 ஆண்டுகள் காத்திருந்து விண்ணில் ஏவப்பட்ட சீன ராக்கெட் வெடித்து சிதறியது.!

குவைசவ்-11 எனும் சீன ராக்கெட் 6 செயற்கைகோளுடன் விண்ணில் ஏவபட்டு, துரதிஷ்டவசமாக சிறுது நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராக்கெட் கட்டுப்பாட்டை இழந்து வெடித்து சிதறியது.

குறைவான திட எரிபொருளை கொண்டு அதிக எடைகொண்ட பொருட்களை ஏற்றிக்கொண்டு ராக்கெட்டை விண்ணில் செலுத்த சீனா முயற்சி  செய்தது. இதற்காக 3 ஆண்டுகளுக்கு முன்னரே குவைசவ்-11 எனும் ராக்கெட்டை தயார் செய்திருந்தது.

அதனை இன்றுதான் சீனா, தன் நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இரவு தோராயமாக 12.30 மணியளவில் குவைசவ்-11 எனும் ராக்கெட் 6 செயற்கைகோளுடன் விண்ணில் ஏவபட்டது.

ஆனால், துரதிஷ்டவசமாக ராக்கெட் ஏவபட்ட சிறுது நேரத்தில் அது தொழில்நுட்ப கோளாறு காரணமாக தனது கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், அந்த ராக்கெட் வெடித்து சிதறியது. குறைவான திட எரிபொருளை கொண்டு அதிக எடைகொண்ட பொருட்களை ஏற்றிக்கொண்டு ராக்கெட்டை விண்ணில் செலுத்த நினைத்த சீனாவின் முயற்சி தோல்வியில் முடிந்துவிட்டது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.