பலூனை பயன்படுத்தி அதிவேக இன்டர்நெட் திட்டம்.! ரிஃப்ட் பள்ளத்தாக்கு மக்கள் மகிழ்ச்சி.! 

கென்யாவில் உள்ள ரிஃப்ட் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பலூனை பயன்படுத்தி அதிவேக இன்டர்நெட் வழங்கும் திட்டத்தை ஆல்ஃபாபெட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் இணையதள வசதி இல்லாத இடங்களே இருக்காது. செல்போன் டவர் மூலம் நகரங்களில் வசிக்கும் மக்கள் இணையதள வசதிகளை பெறுகின்றனர். ஆனால் மலைகிராமங்களிலும், பள்ளத்தாக்கு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இணையதள வசதி கிடைப்பது கடினம். அங்கெல்லாம் செல்போன் டவர் வைப்பதற்கு அதிக செலவாகும். அந்த வகையில் அதுபோன்ற பகுதிகளில் உள்ளவர்கள் இணையதள வசதியை பெற ஒரு பிரமாண்ட பலூன் திட்டத்தை கென்யாவில் உள்ள ஆல்ஃபாபெட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது கென்யாவில் உள்ள ரிஃப்ட் என்ற பள்ளத்தாக்கு பகுதிகளில் வசிக்கும் மக்கள் இணைய வசதிக்காக சுமார் 60 கிலோ மீட்டர் வரை பயணம் செய்து வந்தனர். ஆனால் தற்போது தொலைதொடர்பு கருவியை கொண்ட பலூன்கள் மூலம் ரிஃப்ட் பகுதி மக்கள் வீட்டிலிருந்தே இணைய வசதியை பெற முடியும் என்று ஆல்ஃபாபெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிவேக இண்டர்நெட்டை பலூனை பயன்படுத்தி தருவது உலகளவில் இதுவே முதல் முறையாகும்.