புதிதாக தொடங்கிய 11 மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் புதிதாக தொடங்கிய மருத்துவ கல்லூரியில் மாணவர்களை சேர்க்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

தமிழகத்தில் புதிதாக தொடங்கிய மருத்துவ கல்லூரியில் மாணவர்களை சேர்க்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிதாக தொடங்கிய 11 மருத்துவ கல்லூரிகளில் தலா 150 மாணவர்களை சேர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. 11 மருத்துவ கல்லூரிகளிலும் ஆய்வகம் உள்ளிட்ட வசதிகளை விரைவாக செய்து முடிக்கவும் ஆணையிட்டுள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் புதிதாக தொடங்கப்படும் 11 மருத்துவ கல்லூரிகளில் இந்த ஆண்டே மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்றும் புதிய மருத்துவ கல்லூரிகளுக்கான கட்டுமான பணிகள் ஓரிரு மாதங்களில் நிறைவடையும் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை (சுகாதாரத்துறை) செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடப்படுகிறது.

அதன்படி, தமிழகத்தில் புதிதாக துவங்கப்படும் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர், நாமக்கல், திருவள்ளூர், நாகபட்டினம், கிருஷ்ணகிரி, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்