யானைகள் வேட்டையை தடுக்க உயர்நீதிமன்றம் யோசனை..!

தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா ஒருங்கிணைந்தால் மட்டுமே யானைகள் வேட்டையை தடுக்க முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

தமிழக வனப்பகுதியில் அந்நியமரங்களை அகற்றுவது ,யானைகள் வேட்டையாடப்படுவதை தடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா ஒருங்கிணைந்தால் மட்டுமே யானைகள் வேட்டையை தடுக்க முடியும். வனப்பகுதியில் வளர்ந்துள்ள அந்நியமரங்களை அகற்றி முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது.

நீலகிரி மலை ரயில் பாதை அருகே கொட்டப்பட்டிருந்த 2,387 நெகிழிக்கழிவுகள்  அகற்றம் செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்தது. அந்நியமரங்களை அகற்றுவதற்காக நபார்டு வங்கி 6 கோடி, மத்திய அரசு 7 கோடி ஒதுக்கியுள்ளது என தமிழக அரசு தரப்பில் அனுப்பினர்.  தமிழக அரசு மற்றும் தெற்கு ரயில்வேயின் விளக்கத்தை ஏற்று வழக்கை மார்ச் 18-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.