தமிழில் ஹீரோ! தெலுங்கில் சக்தி! தெலுங்கு திரையுலகில் சிவகார்த்திகேயனின் அடுத்த அடி

தமிழில் ஹீரோ! தெலுங்கில் சக்தி! தெலுங்கு திரையுலகில் சிவகார்த்திகேயனின் அடுத்த அடி

தெலுங்கில் சக்தி என்ற பெயரில் வெளியாகவுள்ள ஹீரோ திரைப்படம். 

நடிகர் சிவகார்த்திகேயன் மெரினா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள இவர், சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நாள்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ஹீரோ. இந்த படத்தை இயக்குனர் மித்ரன் இயக்கியுள்ளார். இப்படத்தில் நாயகியாக நடிகை கல்யாணி பிரியதர்சன நடித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தை தெலுங்கிலும் டப்பிங் செய்யவுள்ளனர். இப்படம் அறிவியல் கண்டுபிடிப்புகளில் சாதிக்கும் மாணவர்களின் திறமை எப்படி அழிக்கப்படுகிறது என்ற கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்திற்கு தெலுங்கில் சக்தி என பெயரிட்டுள்ளனர். இதுகுறித்து படக்குழுவினர் கூறுகையில், எல்லா மொழிக்குமான கதை என்பதால் தெலுங்கில் வெளியிடுகிறோம் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube