கதாநாயகனாக கலக்க வரும் ஹீரோ…!!!! நவீன வசதிகளுடன் நம்மை கொள்ளை கொள்ளும் நாயகன் …!!!!

இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது  ஹச் எப்  டீலக்ஸ் ஐ பி எஸ்   மோட்டார்சைக்கிளை இந்தியாவில் தற்போது  அறிமுகம் செய்துள்ளது.இந்த  புதிய மோட்டார்சைக்கிளில் இன்டகிரேட்டெட் பிரேக்கிங் சிஸ்டம் அதாவது ஒருங்கிணைக்கப்பட்ட தடுப்பி அமைப்பு  (IBS) தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.இத்தனை சிறப்பு அம்சம்  இந்த மோட்டார்சைக்கிளின் துவக்க விலை ரூ.49,067 (இது எக்ஸ்-ஷோரூம்,புது டெல்லி) என நிர்ணயம் தற்போது  செய்யப்பட்டுள்ளது.இந்த ஹீரோ ஹச் எப் டீலக்ஸ் ஐ பி எஸ் மோட்டார்சைக்கிளின் முன்பதிவு துவங்கியுள்ள நிலையில், இவை ஹீரோ விற்பனை மையங்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை.
Image result for HERO HF DELUXE IBS
ஹீரோ ஹச் எப்  டீலக்ஸ் ஐ பி எஸ் மாடல்  தொழில்நுட்பத்தை வாடிக்கையாளர்கள் விரும்பினால் தேர்வு செய்து கொள்ளும் வசதியுடன் வழங்கப்படுகிறது.இந்த ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின்  தொழில்நுட்பம் இந்த வகை மோட்டார்சைக்கிளுக்கு அதிகளவு மைலேஜ் மற்றும் குறைந்தளவு மாசு வெளிப்படுத்தும். ஐ பி எஸ் பிரேக் சிஸ்டம் தவிர ஹச் எப்  டீலக்ஸ் மோட்டார்சைக்கிளில் பெரிய டிரம் பிரேக்கள் வழங்கப்பட்டுள்ளது.
Image result for HERO HF DELUXE IBS
இத்துடன் டீலக்ஸ் மோட்டார்சைக்கிள் ஹெவி கிரீன் என்ற  புதிய நிறத்திலும் கிடைக்கிறது.மேலும் இந்த புதிய ஹச் எப் டீலக்ஸ் மோட்டார்சைக்கிளின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில்  தொழில்நுட்பத்திற்கு நீல நிற லைட்டும் , ஸ்டான்டு வார்னிங் மற்றும் எரிபொருள் அளவு உணர்த்தும் லைட்டுகளும்  வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர இந்த மோட்டார்சைக்கிளில் வேறு எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.ஹீரோ ஹச் எப் டீலக்ஸ் மோட்டார்சைக்கிளில் 92.2சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் தயாரிக்கப்பட்டுள்ளது.
Image result for HERO HF DELUXE IBS
இந்த என்ஜின் 8.36 பி.ஹெச்.பி. பவர், 8.05 என்.எம். டார்க் மற்றும் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்துடன் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்களும், பின்புறம் 2-ஸ்டெப் ஷாக் அப்சார்பர்களும் வழங்கப்பட்டுள்ளது.இந்த புதிய வசதிகள் முலம் இந்த வண்டிகளின் வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியல் உள்ளனர்.
DINASUVADU.
author avatar
Kaliraj

Leave a Comment