5 மாநிலங்களில் நடைபெறும் தேர்தல் தேதிகள் கட்டம் வாரியாக இதோ ..!

5 மாநிலங்களில் பிப்ரவரி 10ஆம் தேதி வாக்குப்பதிவு தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, உத்தரபிரதேசம்,  பஞ்சாப் , உத்தரகாண்ட் , மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் தேதியை அறிவித்தார்.

உத்தரபிரதேசம் 403 தொகுதிகளையும், பஞ்சாப் 117 தொகுதிகளையும், உத்தரகாண்ட் 70 தொகுதிகளையும், மணிப்பூர் 60 தொகுதிகளையும், கோவா 40 தொகுதிகளையும் கொண்டது. 5 மாநிலங்களில் வேட்புமனு தாக்கல் ஜனவரி 14ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜனவரி 21-ம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 5 மாநிலங்களில் பிப்ரவரி 10-ஆம் தேதி தேர்தல் தொடங்கி மார்ச் 7-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 5 மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ம் தேதி நடைபெறும் என தெரிவித்தார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாகவும், மணிப்பூர் மாநிலத்தில் பிப்ரவரி 27, மார்ச் 3 என இரண்டு கட்டங்களாகவும்,  பஞ்சாப், உத்தரகண்ட், கோவா மாநிலங்களில் பிப்ரவரி 14-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவித்தார்.

1-ம் கட்ட தேர்தல் பிப்ரவரி 10-ஆம் தேதி (உத்தரப்பிரதேசம்)

2-ம் கட்ட தேர்தல் பிப்ரவரி 14-ம் தேதி (உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா )

3-ம் கட்ட தேர்தல் பிப்ரவரி 20-ம் தேதி (உத்தரப்பிரதேசம்)

4-ம் கட்ட தேர்தல் பிப்ரவரி 23-ம் தேதி (உத்தரப்பிரதேசம்)

5-ம் கட்ட தேர்தல் பிப்ரவரி 27- ம் தேதி (உத்தரப்பிரதேசம், மணிப்பூர்)

6-ம் கட்ட தேர்தல் மார்ச் 3-ம் தேதி (உத்தரப்பிரதேசம், மணிப்பூர்)

7-ம் கட்ட தேர்தல் மார்ச் 7-ம் தேதி நடைபெறுகிறது. (உத்தரப்பிரதேசம்)

murugan

Recent Posts

வாக்களித்தார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்!

Vijay : சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து விஜய் வாக்கு செலுத்தினார். இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 19) நாடாளுமன்றம் மக்களவைத் தேர்தலுக்கான…

4 mins ago

சேலத்தில் வாக்களிக்க சென்ற 2 பேர் உயிரிழப்பு ..!

Election2024: மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சேலத்தில் வாக்களிக்க சென்ற இருவர் உயிரிழந்ததாக தகவல். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு…

14 mins ago

தொகுதி மக்களிடம் தற்போதே குறைகளை கேட்டறிந்த பாஜக வேட்பாளர் தமிழிசை..!

Election2024 : வாக்களிக்க தாமதமாவதாக தென் சென்னை வாக்காளர்கள் பாஜக வேட்பாளர் தமிழிசையையிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மக்களவைத் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல்…

47 mins ago

விறுவிறுப்பான வாக்குப்பதிவு… 11 மணி நிலவரப்படி தமிழக நிலவரம் இதோ….

Election2024 : காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 23.72 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் இன்று 102 தொகுதிகளில்…

1 hour ago

இங்க ஏன் பலாப்பழம் இருட்டா இருக்கு? வாக்குச்சாவடியில் வாக்குவாதம் செய்த மன்சூர் அலிகான்!

Mansoor Ali Khan : வாக்குச்சாவடியில் தனது பலாப்பழ சின்னம் மீது வெளிச்சம் இல்லை என மன்சூர் அலிகான் வாக்குவாதம். இன்று (ஏப்ரல் 19) இந்தியா முழுவதும்…

1 hour ago

வாக்காளர்கள் கவனத்திற்கு! இதற்கு அனுமதி கிடையாது… தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!

Election2024: மக்களவை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. இன்று நாடு முழுவதும் முதல்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தை…

1 hour ago