கொரோனாவை குணப்படுத்த மூலிகை மைசூர்பா - ஒரு நாளைக்கு நான்கு துண்டுகள் சாப்பிட வேண்டும்.?

கோவை மாவட்டத்தில் உள்ள தொட்டிபாளையம் பகுதியில் இயங்கி வரும் நெல்லை

By murugan | Published: Jul 07, 2020 04:37 PM

கோவை மாவட்டத்தில் உள்ள தொட்டிபாளையம் பகுதியில் இயங்கி வரும் நெல்லை லாலா ஸ்வீட் கடையின் உரிமையாளர் ஸ்ரீ ராம். இவர் மூலிகை மைசூர்பா மூலமாக ஒரே நாளில் கொரோனா குணமாகும் என விளம்பரம் செய்து வருகிறார்.

இந்த மூலிகை மைசூர்பா-வை  19 மூலிகைகள் பயன்படுத்தி தயாரித்து வருவதாகவும், இதை சாப்பிடுபவர்களுக்கு கொரோனா ஒரே நாளில் குணமாகும் எனவும் கடந்த 3 மாதமாக விற்பனை செய்து வருவதாக கூறினார்.

 

மேலும் சின்னியம்பாளையம், ஆர் ஜி புதூர், வெள்ளலூர் ஆகிய பகுதிகளை சார்ந்த கொரோனா அறிகுறி இருந்தவர்களுக்கு இந்த  மூலிகை மைசூர்பா இலவசமாக கொடுத்ததாகவும், இதனால்  ஓரிரு நாட்களில் நோயிலிருந்து குணமாகி வந்ததாகவும் கூறுகிறார்.

 உடனடியாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலில் இருக்கக்கூடிய கொரோனா வைரஸை அழிக்கும் என்று இவர் கூறுகிறார். மேலும் ஒரு நாளைக்கு நான்கு துண்டுகள் சாப்பிட்டு வந்தால் விரைவில் கொரோனா நோயிலிருந்து விடுபடலாம் எந்த பக்க விளைவும் இல்லை எனவும் கூறுகிறார்.

 
Step2: Place in ads Display sections

unicc