ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் கோபால் என்பவர் சென்னையில் உள்ள மணலி திருவிக நகரில் இரண்டு வருடங்களாக வசித்து வருகிறார். கட்டிட வேலை செய்யும் கோபால் தினமும் குடித்துவிட்டு தன் மனைவியிடம் தகராறு செய்ததாக கூறப் படுகிறது.இந்நிலையில் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு காரணமாக கோபால் மனைவி அவரைவிட்டு தனியாக சென்று விட்டார்.

மேலும் கட்டிட வேலை செய்யும் கோபால் இரண்டும்  நாட்களாக வேலைக்கு செல்லாததால் வீட்டின் உரிமையாளர் வீட்டில் போய் சென்றபோது வீட்டிற்குசென்று பார்த்த போது துர்நாற்றம் வீசியது. மேலும் வீட்டின் கதவுகள் பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளர் போலீசாரிடம் தகவல் அளித்தார்.

பின்னர் தகவல் அறிந்து வந்த போலீசார் கதவை திறந்து பார்த்தபோது கோபால் வயிற்றில் மின் வயரால் கட்டி  சுவிட்ச் ஆன் செய்யப்பட்டு இருந்தது. மேலும் கோபால் அருகில் விஷ பாட்டில் ஒன்றும் இருந்தது.

இந்நிலையில் கோபால் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். மேலும் மணலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.