இரண்டு வாரத்தில் மூன்று தங்கம் வென்ற ஹீமா தாஸ்!

 அசாம் மாநிலத்தை சேர்ந்த தடகள வீராங்கனை ஹீமா தாஸ். இவர்  200 மீட்டர் ஓட்டப் பந்தயம் மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தொடர்ச்சியாக கலந்து கொண்டு  வருகிறார். இந்நிலையில் ஹீமா தாஸ்  200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து இரண்டு வாரத்தில் மூன்று பதக்கங்களை  வெற்றி பெற்றுள்ளார்.

நேற்று முன் தினம் நடந்த கிலாட்னோ மேமோரியல் தடகள போட்டியில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஹீமா தாஸ் தங்கம் வென்றார். இந்த பந்தயத்தில் ஹீமா தாஸ் 200 மீட்டரை கடக்க  23.43 விநாடிகளில் கடந்து அசத்தினார்.

அதேபோல இவர் கடந்த 2-ம் தேதி போலந்து நாட்டில் நடைபெற்ற போசான் தடகள போட்டியில் 23.65 வினாடிகளில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றார்.இதற்கு முன்பு போலந்து நாட்டில் நடைபெற்ற மற்றொரு குட்னோ தடகளப் போட்டியில் மீண்டும் தங்கம் வென்று அசத்தினார். இதன் மூலம் இரண்டு வாரங்களில் 3 தங்கப்பதக்கம் வென்ற இந்திய தடகள வீரர்  என்ற சாதனை  ஹீமா தாஸ் படைத்துள்ளார்.

author avatar
murugan