கடந்த சில மாதங்களாக வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது குறித்து அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், வாகன ஓட்டிகள் சீட்பெல்ட், தலைக்கவசம் உள்ளிட்ட விதிகள் முறையாக பின்பற்றவில்லை என வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இதனையடுத்து, ஹெல்மேட் அணியாமல் வாகனம் ஓட்டுபவருக்கு விதிக்கப்படும் அபராதத்தை ஒரு வாரத்தில் அதிகரிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.