கடும் நிதிச்சுமை! ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இன்றுடன் விமான சேவை நிறுத்தம்

17

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இன்று இரவிலிருந்து இருந்து தற்காலிகமாக அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.

ஜெட் ஏர்வேஸ்  நிறுவனமானது மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.கடந்த சில பல மாதங்களாகவே மிக கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.இந்த கடன் பிரச்சணையால் தனது விமானிகளுக்கும், ஊழியர்களுக்கும் சரிவர சம்பளம் தர முடியாமல் கடும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.இந்த நிலையிலும் ஜெட் ஏர்வேஸ் தனது  நிறுவனத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது.

இந்நிலையில் கடும் நிதிச்சுமை பிரச்சனை காரணமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இன்று இரவிலிருந்து இருந்து தற்காலிகமாக அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.