பலத்த காற்றுடன் கனமழை.! 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக

By gowtham | Published: May 29, 2020 01:28 PM

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல்.

தமிழகத்தில் வெப்பச்சலனத்தால் 8 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.மாலத்தீவு பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் ஜூன் 5ம் தேதி வரை ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

நீலகிரி,கோவை, தென்காசி, குமரி,ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.மேலும் வேலூர் திருப்பத்தூர் திருவண்ணாமலை திருத்தணியில் 106 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளது.

ஏற்கனவே தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன்-1 ல் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் முந்தைய காலங்களில் ஜூன் 5 ல் தான் தென்மேற்கு பருவமழை தொடங்கியிருந்த நிலையில், தற்போது 1 ஆம் தேதி தொடங்குறது.

Step2: Place in ads Display sections

unicc