புதுச்சேரி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை…..!

புதுச்சேரி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

ஏற்கனவே இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிக்கிறது .அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மீனவர்கள் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு இன்றும், நாளையும் (நவம்பர் 21 ஆம் தேதி ) மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

அதேபோல் சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், வடபழனி, கோயம்பேடு, வேளச்சேரி, தரமணி, நங்கநல்லூர், எழும்பூர், தாம்பரம்,கோடம்பாக்கம், பல்லாவரம், சேத்துப்பட்டு, சிட்லப்பாக்கம், தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

Leave a Comment