தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும். இதை தவிர்த்து, சென்னையை பொறுத்தவரை மாலை அல்லது இரவில் மழை வெளுத்து வாங்கும் என தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு, சென்னையின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் கணித்துள்ளது.
சென்னை நிலவரம்:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.