in-rain tamil nadu

தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

By

இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

   
   

அடுத்த 6 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நாளை (29.10.2023)

தமிழ்நாட்டின் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கன்னியாகுமரி, திருநெல்வேல் ஆகிய 14 மாவட்டங்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நாளை மறுநாள் (30.10.2023)

தமிழகத்தின் கோயம்புத்தூர், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் ஆகிய 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Dinasuvadu Media @2023