7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் – வானிலை மையம்..!!

வளிமண்டல சுழற்சி காரணமாக  7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில், தற்போது சில நாட்களாக பெரும்பாலான இடங்களில் மழையும் பெய்து வருகிறது அந்த வகையில் குறிப்பாக திருப்பூரில் கன மழை பெய்து வருகிறது. அதைப்போல் சென்னை மாவட்டத்தில் இன்று அதிகாலையில் மிதமான மழை பெய்தது.

 இந்த நிலையில் இன்று குமாரி கடல் பகுதயில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நீலகிரி, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, திருப்பத்தூர், ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வாய்ப்பு என்றும் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.