33.6 C
Chennai
Friday, May 7, 2021

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்க கடலில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் உள்ள மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள ஒரு சில பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலும், கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கும்,சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Latest news

Related news