அபராதங்களுக்கு கடும் எதிர்ப்பு! இன்று நாடு முழுவதும் லாரிகள் ஸ்டிரைக்!

இன்று ஒருநாள்  நாடு முழுவதும் லாரி ஓட்டுநர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடவுள்ளனர்.

புதிய மோட்டார் வாகனச் சட்டம் நாடு முழுவதும் கடந்த 1 ஆம் தேதி அமலுக்கு வந்தது.அபராதங்களும் பன் மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.இதற்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனால் நாடு முழுவதும் லாரி ஓட்டுனர்கள் இன்று  ஒருநாள் (செப்டம்பர் 19-ஆம் தேதி ) ஸ்டிரைக்கில் ஈடுபடவுள்ளனர். .அபராத தொகையை குறைக்க வலியுறுத்தியும்,லாரி தொழிலை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டிரைக் நடைபெறுகிறது. இதனால் இன்று  காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள் இயங்காது.இந்த ஸ்டிரைக்கில் அனைத்திந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் மற்றும் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு அளித்துள்ளது .இந்த ஸ்டிரைக்கில் சுமார் 45 லட்சம் லாரிகள் இயங்காது என்று தகவல்  தெரிவிக்கப்பட்டுள்ளது.