“வாக்களித்த அனைவருக்கும் நன்றி”- கமல்ஹாசன் புகழாரம்..!


49
/ 100


வாக்களித்த மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி:ம.நீ.ம.தலைவர் கமல்ஹாசன் புகழாரம்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரான கமல்ஹாசன் ,நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தன்னுடன் கைகோர்த்து துணையாய் நின்ற கட்சி உறுப்பினர்கள்,தோழமை கட்சிகள்,வாக்காளர்கள்,மீடியாகாரர்கள் மற்றும் சக போட்டியாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்,என்று தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து கமல்ஹாசன் கூறுகையில்,”கோவிட்-19 தொற்று ஏற்படும் இந்த இக்கட்டான சூழலிலும் 72 சவீத வாக்காளர்கள் தங்களது கடமையை சிறப்பாக ஆற்றியிருப்பது, ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு இருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கையைக் காட்டுகிறது”,என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,தமிழகத்தை சீரமைப்போம் என்பது வெறும் கோஷமல்ல,அது எங்களின் கூட்டுக்கனவு.இந்த தமிழ் மண்ணை,மக்களை காக்க என்றும் களத்தில் நிற்போம் என்று கமல்ஹாசன் ஊறுதியளித்துள்ளார்.

Exit mobile version