ஐகோர்ட்டுக்கு உத்தரவுக்கு பிறகே ஜாமீன் உள்ளிட்ட மனுக்கள் மீது விசாரணை – நீதிபதி அல்லி

By

judge alli

ஆட்கொணர்வு மனு தொடர்பான உத்தரவு வந்த பிறகே மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் மனு மீதான விசாரணை.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பான அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பிறகே, மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெறும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தொடர்பான உத்தரவு வந்த பிறகே மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் மனு, அமலாக்கத்துறை காவல் கோரிய மனு விசாரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவுப்படி செந்தில் பாலாஜியிடம் காணொலி மூலம் விசாரணை நடைபெற்ற நிலையில், நீதிபதி அல்லி இவ்வாறு கூறினார்.