பருக்கள் மறைய ஆரோக்கியமான இயற்கை வழிமுறை!

முகத்தின் அழகை கெடுப்பதற்காகவே தோன்றக்கூடிய கொழுப்பு பருக்களால் சிலர் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். இதனை போக்க செயற்கையான வழிமுறைகளை கையாள்வதை விட்டுவிட்டு எளிதான இயற்கை முறை ஒன்றை பார்க்கலாம். 

பருக்கள் மறைய

முதலில் வேப்பிலையை காய வைத்து அரைத்து வைத்துக்கொள்ளவும். பின்பு அந்த வேப்பிலை பொடியுடன், சந்தன போடி 1 ஸ்பூன் சேர்த்து அதனுடன் நீர் சேர்த்து கலவையாக கலக்கி கொள்ளவும். 

இதனை பருக்கள் உள்ள பகுதியில் மட்டுமல்லாமல் முழு முகம் மற்றும் கழுத்து பகுதிகளிலும் பூசி 15-20 நீடங்கள் ஊறவைத்து கழுவவும். இது போல வாரத்துக்கு இரு முறை செய்து வந்தால் முக அழகை கெடுக்கும் பிம்பிள் மறையும்.