சுகாதாரத்துறை தயாராக இருக்க உத்தரவு!

 வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சுகாதாரத்துறை தயாராக இருக்க தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசு பிறப்பித்த உத்தரவின் படி மாவட்ட வாரியாக உள்ளாட்சி,வருவாய்,பேரிடர் மீட்பு படையினர் உடன் இணைந்து பணிகளை துரித வேகத்தில் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் சுகாதார பணியாளர் குழு 24 மணி நேரமும் மீட்பு பணியில் தயாராக இருக்க வேண்டும் என்றும் மருத்துமனைகளில் ஜென்ரேட்டர், மருந்துகள் இருப்பு மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் போன்ற அத்தியாவசிய தேவைகளை உறுதி செய்ய வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

!
author avatar
Kaliraj