விமானத்தில் பயணம் செய்ய ஆரோக்கிய சேது செயலி அவசியம்.!

விமானத்தில் பயணம் செய்ய ஆரோக்கிய சேது செயலி அவசியம்.!

விமானத்தில் பயணம் செய்யும் அனைவரும் கட்டாயம் ஆரோக்கிய சேது செயலி பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும்.

நாடு முழுவதும் வரும் 25 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என விமான போக்குவரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்திருந்தார். இதனால் அனைத்து விமான நிலையங்களும் தயார் நிலையில் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரண்டு மாதங்கள் நாடு முழுவதும் உளநாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. 

இதனிடையே, நாடு முழுவதும் நான்காவது கட்ட ஊரடங்கு மே 31 வரை அமலில் இருக்கும் நிலையில், மருத்துவ உபகரணங்கள் மற்றும் வெளிநாட்டில் சிக்கி தவித்த இந்தியர்களை மீட்டு வருவதற்கு மட்டும் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, வரும் 25 முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்படும் என்று அமைச்சர் அறிவித்திருந்தார். இந்த நிலையில், விமானத்தில் பயணம் செய்யும் அனைவரும் கட்டாயம் ஆரோக்கிய சேது செயலி பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும் என்றும் 15 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் அவசியம் இல்லை என்று இந்திய விமான போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மேலும் உள்நாட்டு விமான சேவைக்கு முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube