நல்லாசிரியர் விருது எனக்கு வேண்டாம்..நீங்களே இதை வைத்துக் கொள்ளுங்கள்..ஓய்வுப்பெற்ற தலைமைஆசிரியர் அதிரடி

  • 5-8 வகுப்புகளுக்கு நடைபெற இருக்கும் பொதுத்தேர்விற்கு எதிர்ப்பு 
  • தலைமை ஆசிரியர் ஒருவர் தன் பெற்ற நல்லாசிரியர் விருதை திருப்பி ஒப்படைக்க முடிவு

5 மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 2019-2020 கல்வியாண்டு முதல் தமிழக அளவில் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.இதற்கு பலத்த எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்ட நிலையில் கிராமபுற மாணவர்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் மேலும் அவர்கள் தங்கள் கல்வியை பாதியிலேயே நிறுத்தும் நிலையை இந்த பொதுத்தேர்வு உருவாக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் மீண்டும் தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் அதிகமாக பெருகுவார்கள் என்று அதிர்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

Image result for நல்லாசிரியர் விருது ஒப்படைத்த தலைமை ஆசிரியர்

இந்நிலையில் தான் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை வா.உ.சி. சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அல்லிமுத்து என்பர்  2012 – 2013 ஆண்டில் தனக்கு வழங்கப் பட்ட நல்லாசிரியர் விருதினை திருப்பி ஒப்படைக்க முடிவு செய்து உள்ளார். விருதினை திருப்பி ஒப்படைக்க அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற அவர் ஆட்சியர் மலர்விழியிடம் தனது நல்லாசிரியர் விருதை திருப்பி ஒப்படைத்தார்.ஆனால் விருதினை வாங்க மருத்த  ஆட்சியரோ  ஓய்வுப்பெற்ற தலைமை ஆசிரியரின் .

Image result for நல்லாசிரியர் விருது ஒப்படைத்த தலைமை ஆசிரியர்

கோரிக்கையை தமிழக அரசுக்கு பரிசீலனை செய்வதாக உறுதி அளித்தார்.இது குறித்து ஓய்வுப்பெற்ற அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் கூறுகையில் ஒரு வாரத்திற்குள் தனது கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றவில்லை ஆனால் எனக்கு வழங்கிய விருதை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பி வைப்பேன் என்று  கூறிய உள்ளார்.

author avatar
kavitha