37 C
Chennai
Sunday, June 4, 2023

விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்… போப் பிரான்சிஸ் இரங்கல்.!

ஒடிசா விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார் புனித...

கணவருடன் சண்டை…4 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்த பெண்.!!

ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் உள்ள 27 வயது பெண்...

மும்பை தோல்வி அடைந்ததற்கு இவர் தான் காரணம்.? கொந்தளிக்கும் ரசிகர்கள்.!!

நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2023-யின் குவாலிஃபயர் 2-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் நரேந்திர மோடி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் குஜராத் அணி செமயாக விளையாடி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டியில் நுழைந்தது.

mi vs gt
mi vs gt [Image source : IPL20]

மும்பை அணி தோல்வியடைந்துள்ள நிலையில், மும்பை வெற்றிபெறும் என காத்திருந்த ரசிகர்களுக்கு கடைசியில் ஏமாற்றம் தான் என்று கூட கூறலாம்.  இந்த நிலையில், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மும்பை தோல்வியடைந்ததற்கு கிறிஸ் ஜோர்டான் தான் முக்கிய காரணம் என தங்களுடைய ஆதங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

ஏனென்றால், கிறிஸ் ஜோர்டான் நேற்று நடைபெற்ற போட்டியில் 4 ஓவர்கள் மொத்தமாக பந்து வீசிய போது கிட்டத்தட்ட 56 ரன்கள் கொடுத்தார். ஒரு விக்கெட் கூட அவர் எடுக்கவும் இல்லை. அதைப்போல அவரால் தான் இஷான் கிஷனும் போட்டியில் இருந்து விலகினார்.

Ishan Kishan
Ishan Kishan [Image source : twitter/@Diyuaadi]

குஜராத் அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது இஷான் கிஷன் கிறிஸ் ஜோர்டானை பார்த்து பேசுவதற்காக சென்றபோது எதிர்பாராத விதமாக கிறிஸ் ஜோர்டானின் முழங்கை தெரியாமல் பட்டு இஷான் கிஷன் கண்ணீல் அடிபட்டது. இதன் காரணமாகவே அவர் போட்டியின் பாதியிலே வெளியேறினார். அவருக்கு பதிலாக அணியில் விஷ்ணு வினோத் சேர்க்கப்பட்டார்.

பிறகு இஷான் கிஷன் விளையாட முடியாத காரணத்தால் மும்பை அணிபேட்டிங் செய்யும்போது சற்று தடுமாறியது. ஒரு வேளை அவர் விளையாடி இருந்தால் ரோஹித் சர்மாவுடன் இணைந்து மும்பை அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்திருப்பார். இஷான் கிஷன் பேட்டிங் செய்யாதது இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணிக்கு சற்று பின்னடைவாக இருந்தது. இதன் காரணமாகவே, மும்பை ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் குஜராத் வெற்றிபெறுவதற்கு முக்கிய காரணமே கிறிஸ் ஜோர்டன் தான் என” கொந்தளித்து வருகிறார்கள்.

மேலும், நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி ஆரம்பத்திலே அதிரடியாக விளையாடியது என்றே கூறலாம்.  குறிப்பாக சுப்மன் கில் அதிரடியாக விளையாடி சதம் விளாசி சிக்ஸர்களில் ரசிகர்களுக்கு வானவேடிக்கை காட்டினார் என்றே கூறலாம். இதன் மூலம் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 233 ரன்கள் குவித்து 234 என்ற இமாலய இலக்கை மும்பை அணிக்கு எதிராக நிர்ணயித்து.

MIvsGT
MIvsGT [Image source: file image ]

பிறகு களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் தங்களுடைய அனைத்து விக்கெட்களையும் இழந்து 171 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் மூலம் குஜராத் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிபோட்டுக்குள் நுழைந்தது. இறுதிப்போட்டியில் சென்னை அணியுடன் குஜராத் அணி மோதுகிறது நாளை இறுதிப்போட்டி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.