ரூ.342 கோடி இன்ஸ்டாகிராம் மூலம் சம்பாதித்து முதலிடம் பிடித்த கால்பந்து வீரர்.! கோலிக்கு 11-வது இடம்.!

ரூ.342 கோடி இன்ஸ்டாகிராம் மூலம் சம்பாதித்து முதலிடம் பிடித்த கால்பந்து வீரர்.! கோலிக்கு 11-வது இடம்.!

  • தனியார் நிறுவனங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் விளம்பரப் படங்களை பதிவிடுவதன் மூலமாக பெறும் ஊதியத்தை ஆண்டு இறுதியில் பட்டியலை வெளியிடும்.
  • அதில் இந்த வருடம் இன்ஸ்டாகிராம் மூலமாக அதிக வருமானம் பெற்ற வரிசையில் கால்பந்து வீரர் ரொனால்டோ முதல் இடம் பிடித்துள்ளார்.

பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில், பிரபலங்கள் பலரும் கணக்கு வைத்துள்ளனர். இவர்கள் சமூக வலைத்தளங்களில் தனியார் நிறுவனங்கள் குறித்து பதிவிடுவதன் மூலமாக பெறும் ஊதியத்தை ஆண்டு இறுதியில் அந்நிறுவனங்கள் வெளியிடும். இந்தாண்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரப் படங்களை பதிவிட்டு வருமானம் பெற்றவர்களின் வரிசையில் கால்பந்து வீரர் ரொனால்டோ முதல் இடம் பிடித்துள்ளார்.

ரொனால்டோவை இன்ஸ்டாகிராமில் 19 கோடி பேர் பாலோவர்ஸ், இந்தாண்டு மட்டும் விளம்பரம் தொடர்பான 49 புகைப்படங்களை பதிவிட்டதன் மூலம் ரூ.342 கோடி வருவாயாக அவர் பெற்றுள்ளார். அவரை தொடர்ந்து அதிக வருமானம் பெற்ற பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள அர்ஜெண்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸி, இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் ரூ.164 கோடியை வருமானமாக பெற்றுள்ளார்.

மேலும், 3-வது இடத்தில் உள்ள அமெரிக்க மாடல் அழகி கெண்டால் ஜென்னர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக வருமானம் பெரும் பெண் என கூறப்படுகிறது. இவர் உள்ளாடை தொடர்பான புகைப்படங்களை பிரபலப்படுத்தியதன் மூலம் இந்தாண்டு மட்டும் ரூ.92 கோடி வருமானம் பெற்றுள்ளார். வெறும் 26 படங்களை பதிவிட்டே அவர் இந்த தொகையை பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர்களை தொடர்ந்து லண்டனை சேர்ந்த முன்னாள் கால்பந்து வீரரான டேவிட் பெக்காம் 4-வது  இடத்தில் உள்ளார். 5-வது இடத்தில் அமெரிக்கா பாப் பாடகி செலீனா கோம்ஸ் இருக்கிறார்.

பின்னர் கால்பந்து வீரர் நெய்மர் 6-வது இடத்திலும், கெய்லீ ஜென்னர் 8-வது இடத்திலும், மாடல் அழகி கர்தார்ஷியான் 10-வது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி 11-வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய மதிப்பில் அவர் ரூ.7 கோடி சம்பாதித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube