29 C
Chennai
Wednesday, June 7, 2023

ஜூன் 17-ஆம் தேதி மாணவர்களை சந்திக்கிறார் நடிகர் விஜய்!

ஜூன் 17-ஆம் தேதி 10 மற்றும் 12-ஆம் வகுப்பு...

இந்த செயல் வேலியே பயிரை மேய்வது போல உள்ளது – ஓபிஎஸ்

ஆவினில் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தி குழந்தைகளின் எதிர்காலத்தை...

செழிப்பு இயற்கை உரத்தை அறிமுகப்படுத்தினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

செழிப்பு என்ற பெயரில் இயற்கை உரத்தை அறிமுகப்படுத்தி விற்பனையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர். 

செழிப்பு எனும் பெயரிலான இயற்கை உரத்தை சென்னை தலைமை செயலகத்தில் அறிமுகம் செய்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். அதன்படி,செழிப்பு என்ற பெயரில் இயற்கை உரத்தை அறிமுகப்படுத்தி விற்பனையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர். ஈரக்கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் உரத்திற்கு செழிப்பு என பெயரிடப்பட்டுள்ளது.

மேலும், சென்னை மாநகராட்சியில் ரூ.35.7 கோடியில் முடிவுற்ற 34 திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இதில், 4 சீர்மிகு பள்ளி கட்டமைப்புகள், 20 பூங்காக்கள், 5 விளையாட்டு திடல், 5 சுகாதார நிலைய கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.561.26 கோடி மதிப்பீட்டில் 14 முடிவுற்ற திட்டப்பணிகளையும் திறந்து வைத்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின். மேலும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைக்கான OR CODE மென்பொருள் செயலியையும் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.