டிடிவி தினகரன் தரப்பிற்கு குக்கர் சின்னம் இல்லை : உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிரடி

  • இரட்டை இலை மற்றும் குக்கர் சின்னம் ஆகிய இரண்டு சின்னங்களுக்கும் ஒரே நேரத்தில் உரிமை கோருவது ஏன் என தினகரன் தரப்புக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிரடி கேள்வி

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகளை காட்சிகள் பெரும் மும்முரமாக செய்து வருகின்றன. தமிழகத்தைப் பொருத்தவரை திமுகவில் ஒரு கூட்டணியும் அதிமுகவில் ஒரு பெரும் கூட்டணியும் பிரச்சாரத்தை துவக்கி உள்ளது. ஆனால் தினகரன் தரப்பிலுள்ள அமமுக கட்சி பதிவு செய்யப்படாதது அவருக்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ளது. ஆர்கே நகர் இடைத்தேர்தலில் குக்கர் சினத்தில் சுயேச்சையாக போட்டியிட்ட அவர் தற்போது நாடாளுமன்றத் தேர்தல் குக்கர் சினத்த்தை கேட்டு தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்து இருந்தார்.

ஆனால் பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு மட்டுமே கோரப்படும் சின்னம் ஒதுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் நிராகரித்தது. இதனால் தேர்தல் ஆணையத்தின் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் தினகரன். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குக்கர் சினத்தை ஒதுக்கி உத்தரவிட முடியாது என தீர்ப்பளித்துள்ளனர். மேலும், இரட்டை இலை மற்றும் குக்கர் சின்னம் ஆகிய இரண்டிற்குமே ஒரே நேரத்தில் நீங்கள் உரிமை கோருவது எதற்காக எனவும், இன்னும் கட்சியைப் பதிவு செய்யாமல் இருப்பது ஏன் எனவும் தினகரன் தரப்பிற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிலையில் எங்கள் தரப்பிற்கு குக்கர் சின்னம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் போட்டியிடுவோம் எனவும் அறிவித்துள்ளார் டிடிவி தினகரன்.

author avatar
Srimahath

Leave a Comment