ஹேப்பி பர்த்டே ஏ.ஆர்.முருகதாஸ் ! பிறந்தநாள் ஸ்பெஷல்!!

தமிழ் சினிமாவில் தல அஜித் நடிப்பில் வெளியான தீனா என்ற மெகா ஹிட் படத்தின் மூலம் வெற்றிப்பட இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். இந்த தீனா படத்தில் தான்  அஜித் ‘தல’ என ரசிகர்களால் அழைக்கபட்டார்.

முதல் படத்தில் மாஸ் காட்டியவர் அடுத்தடுத்து தனது சமூக கருத்துக்களை முன் வைத்து படங்களை எடுக்க ஆரம்பித்தார். அதில் ரமணா முக்கியமானது. அதில்  முன்னிலைபடுத்தி படமெடுத்து வெற்றிபெற்றார். அடுத்து சூர்யாவை வைத்து கஜினி எனும் மெகா ஹிட் படத்தை இய்க்கினார். அந்தபடத்தை ஹிந்தியில் அமீர்கானை வைத்து படமெடுத்து அங்கும் மெகா ஹிட் இயக்குனராக வளம் வந்தார்.

இதனல தொடர்ந்து தமிழில் 7ஆம் அறிவு படத்தை தொடர்ந்து, விஜயை வைத்து துப்பாக்கி, கத்தி எனும் மெகா ஹிட் படத்தை எடுத்தார். அதனை தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழில் ஸ்பைடர் எனும்  எடுத்தார். அந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இதனை தொடர்ந்து தளபதி  விஜயை வைத்து சர்கார் படத்தை எடுத்து வருகிறார்.

இன்று பிறந்தநாள் காணும் சர்கார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களுக்கு தினசுவடு பத்திரிக்கை சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment