#HaveyRain: 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என்று சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென் தமிழக மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களில் மிதமானது முதல் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில்,  தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, தென்காசி, நெல்லை, தேனி, திண்டுக்கல், மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதியில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

மத்திய கிழக்கு அரபிக்கடல், கர்நாடக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.