,

விஜய் சேதுபதியின் மகளை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் குடும்ப புகைப்படம்!

By

Sethupathi with his son Surya and daughter Shreeja

கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல படங்களில் வில்லனாக நடித்து கலக்கி வருபவர் நடிகர் விஜய்சேதுபதி. இவருடைய மார்க்கெட் இப்போது எங்கு இருக்கிறது என்பதை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அந்த அளவிற்கு மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கிறார். இவர் இப்போது ஜவான் திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 7- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதற்கிடையில், நடிகர் விஜய்சேதுபதி தனது மகன் மற்றும் தனது மகளுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இப்போது வைரலாகி வரும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நடிகர் விஜய்சேதுபதிக்கு இவ்வளவு பெரிய மகளா? என ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ஏனென்றால், விஜய் சேதுபதியின் மகளை சின்ன வயதில் இருக்கும்போது விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது ரசிகர்கள் பார்த்திருப்பார்கள். ஆனால், இப்போது நன்றாக வளர்ந்து ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு உள்ளதால் ரசிகர்கள் ஆச்சரியத்தில் இருக்கிறார்கள். விஜய் சேதுபதியின் மகனுடைய புகைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி வைரலாகி இருந்தது.

அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் விஜய் சேதுபதி மகனும் நன்றாக வளர்ந்துவிட்டாரே எனவும் கூறி இருந்தார்கள். மேலும், விஜய்சேதுபதியின் மகன் சூர்யா தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பில் இருந்து அவருடைய புகைப்படம் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.