இந்த மாவில் நீங்கள் பூரி சாப்பிட்டதுண்டா…?

இந்த மாவில் நீங்கள் பூரி சாப்பிட்டதுண்டா…?

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிட கூடிய, கடலை மாவில் அசத்தலான பூரி செய்வது எப்படி என்று பார்ப்போம். 

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பூரி  என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், கடலை மாவில் அசத்தலான பூரி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • கடலை மாவு – கால் கப்
  • மைதா மாவு – 1 கப்
  • சோம்பு – அரை டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  • எண்ணெய் – தேவைக்கேற்ப
  • உப்பை – தேவைக்கேற்ப

செய்முறை

முதலில் தேவையான பொருட்கள் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மைதா மாவு, சோம்பு, மிளகாய் தூள், உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து, பூரி பதத்திற்கு குழைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அந்த மாவுகளை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, தனியாக தேய்த்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதை பொரிக்க எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூரியை ஒவ்வொன்றாக போட்டு பொரித்தெடுக்க வேண்டும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube